கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் - பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி
பா.ஜ.க விவசாய அணி பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.ஒவ்வொரு கட்சியும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது தான் விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்வது மற்றும் பயிர் கடன் வழங்குவது குறித்து பேசி விவசாயிகளை நினைப்பார்கள் அதன் பின்னர் மறந்துவிடுவார்கள்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டது போல, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களுக்கு சிலை வைக்கப்படும். சிலையை உடைத்துதான் தங்கள் இருப்பை காட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சித்தாந்தம் உள்ளது, மக்கள் அதிகாரம் அளித்த பிறகு யாருடைய சிலையை எங்கே வைக்க வேண்டுமா அங்கு வைப்போம் என்று பேசினார்.நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல நடைபெற்றுவரும் நிலையில் அங்கு காவல்துறை பணியாற்ற வேண்டும், அதைதவிர்த்து பாஜ க கூட்டத்தில் பேரணியில் இவ்வளவு போலீஸார் தேவையில்லை என்று கூறினார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை.... மத்திய அரசு ஒரு லட்சம் கோடி விவசாய உட்கட்டமைப்பு நிதியை ஒதுக்கி உள்ளார்கள். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 6000 கோடி நிதியில் குறைந்த அளவு மட்டுமே பணத்தை பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இன தலைவர்கள் அமர்வதற்கு இருக்கையும், தேசிய கொடியை ஏற்றும் உரிமையும், பெயர் பலகையை வைக்க உரிமையும் மறுக்கப்படுகிறது. ஆனால் சமத்துவம், சமூக நீதி குறித்து தமிழகத்தில் தான் அதிகம் பேசப்படுகிறது. எனவே இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சமநீதி, சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
போதைப்பொருளை ஒழிக்க முதல் கட்டமாக மதுபான கடைகளை மூட வேண்டும். ஆனால் மாவட்டம் தோறும் ஆட்சியரை கொண்டு மீட்டிங் நடத்தி வருவாயை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு டாஸ்மாக்கை மூடாமல் போதை பொருளை ஒழிக்க முடியாது, அரசியல் பின்புலன் உள்ளவர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சாராய ஆலையை இயக்கி வருகிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கள் கட்சியினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும் என்று சொன்ன கனிமொழிகூட தற்போது வாயை திறப்பதில்லை, எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டம் நடத்திய ஸ்டாலின் தற்போது ஆளுங்கட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறார் டாஸ்மாக் மூடல் குறித்து வாயை கூட திறப்பதில்லை.
மின்சார திருத்த சட்டத்தால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு ஏற்படுத்தாது. அச்சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என கூறுவது தவறு. மின்சார பயன்பாடு குறித்த அளவீடு கணக்கெடுக்கப்படும். இந்த சட்டம் வரும்போது தமிழகத்தில் ஊழல் செய்த மின்துறை அமைச்சர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.
யாரும் யாருடன் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ரஜினி ஆளுநரை சந்தித்திருப்பதை வைத்து சிலர் தான் அதை அரசியலாக்குகிறார்கள். வேலையில்லாத அரசியல்வாதிகள் பலர் இதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.
ஆவின் பால் விலையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். ஆவின் விலை உயர்வு தான் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதற்கு காரணம் என்றார்.மதுவிலக்கு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் அந்த அந்த மாநிலத்தின் நிலைமையை வைத்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏழைத்தாயின் தாலியை அறுக்கும் வகையில் மது அதிகப்படியாக விற்கப்படுகிறது.
டாஸ்மாக்கால் தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. டாஸ்மாக்கை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டும் என்று திமுக நினைத்தால் மக்களை எதற்காக பகடைக்காயாக பயன்படுத்த வேண்டும், எனவே தான் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்கிறோம். கள்ளுக்கு அனுமதி வழங்கினால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மதுக்கடையை படிப்படியாக மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும்.
கட்டிடம் கட்டப் போகிறேன் என முதலமைச்சர் வைத்து கட்டிடம் கட்டி விட போகிறார்கள், கலைஞருக்கு வைக்கப்படும் பேனா சிலையில் எத்தனை அமைச்சர்கள் உள்ளே வைத்து கட்டப் போகிறார்கள் என தெரியவில்லை....
இந்தியாவில் சமூக சீர்த்திருத்ததிற்காக
பெரியார் உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அவர்களுக்கு சிலை வைப்போம். யாருடைய சிலையை எங்கே வைப்பது என்பதை முடிவெடுப்போம்.
பெரியாரை தாக்கி பேச வேண்டிய அவசியம் பா.ஜ.க விற்கு இல்லை. பெரியாரின் சிலைக்கு பா.ஜ.க வால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரியார் சமூகத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளார்.இந்த கூட்டத்தில் பா.ஜ.க விவசாய அணியின் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO