நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பாலூட்டும் தாய்மார்கள் அவதி

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பாலூட்டும் தாய்மார்கள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை நகராட்சி நிர்வாகத்தினர் சுமார் ஒரு வருட காலமாக பூட்டி வைத்துள்ளதால் கிராமங்களிலிருந்து தங்களது சொந்த வேலையாக துறையூர் வரும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர்.

இத்திட்டமானது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். குழந்தைகளுக்கு தாய்மார்கள் பொது இடத்தில் பால் ஊட்டுவது மிகச் சிரமமாக இருப்பதை அறிந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை என தனித் திட்டத்தை துவங்கி ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் தனி அறை அதற்காக ஒதுக்கப்பட்டது.

தற்போது ஒரு வருட காலமாக துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை துறையூர் நகராட்சி நிர்வாகம் பராமரிப்புகள் செய்யாமல் தாயம்மர்களின் பயன்பாட்டிற்க்கு விடாமல் பூட்டு போட்டுள்ளது. மேலும் அறைக்கு செல்லும் பாதையை தரைகடை வியாபாரிகளும், அரசு பேருந்து பரிசோதனை அதிகாரிகளும் ஆக்கிரமித்து உள்ளனர்.

இதனால் குழந்தை பெற்ற தாய்மார்கள் நகரத்திற்கு தங்கள் சொந்த வேலையாக வரும் பொழுது தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக சரி செய்து மீண்டும் தாய்மார்களுக்கு அறையில் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட  அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO