அமைச்சர் மீது சிபிஐ விசாரணை - புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மீது சிபிஐ விசாரணை - புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியும், கள்ளச்சாராயத்தினால் 22 பேர் உயிரிழப்பிற்கு தமிழ்நாடு அரசை கண்டித்தும், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் பகிரங்கமாக வசூல் செய்யும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ விசாரணை நடத்தி,

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று செந்தில் பாலாஜி மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பத்து ரூபாய் பாலாஜி என விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn