டிசம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் கேபிள் டிவி ஒளிப்பரப்பு தடை

டிசம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் கேபிள் டிவி ஒளிப்பரப்பு தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் உள்ள தொலைக்காட்சிகள் மாவட்ட அளவிலான தொகுப்பு உள்ளூர் தொலைக்காட்சிகள் மாநில அளவிலான உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்து வருகிறது.உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்புவது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புதுறை அமைச்சர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

கேபிள் டிவி ஒளிப்பரப்பு மேற்கொள்ளும் அனைத்து MSO களும் டிசம்பர் 1 முதல் சில நடைமுறைகளைதெரிவித்துள்ளது. கேபிள் டிவி ஒளிப்பரப்பு மேற்கொள்ளும் அனைத்து MSOகளும் ஒளிப்பரப்பப்படும் மொத்த சேனல்களின் எண்ணிக்கையில் 5% சேனல்களை மட்டுமே மாநில அளவிலான உள்ளூர் தொலைக்காட்சிகளாக ஒளிப்பரப்பு செய்ய வேண்டும்.

கேபிள் டிவி ஒளிப்பரப்பை மேற்கொள்ளும் அனைத்து MSOகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மாவட்ட அளவில் உள்ளூர் தொலைக்காட்சிகள் மட்டுமே ஒளிப்பரப்பு செய்ய வேண்டும். எனவே உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பு சேவைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதால் தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான உள்ளூர் தொலைக்காட்சிகளை டிசம்பர் 1ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக ஒளிபரப்ப இயலாத நிலை உள்ளது.

மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும் அனைத்து வகையான உள்ளூர் தொலைக்காட்சிகளும் டிசம்பர் 1ம் தேதி முதல் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி வரன்முறைப்படுத்தப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision