திருச்சியில் யானைகளுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்

திருச்சியில் யானைகளுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட யானைகள் மறுவாழ்வு மையம் எம் ஆர் பாளையத்தில் இன்று (12.08.2024) உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, மண்டல தலைமை வன பாதுகாவலர் N.சதீஷ் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட வன அலுவலர் S.கிருத்திகா தலைமையில்,

உதவி வன பாதுகாவலர் (Mini Zoo)/ உதவி இயக்குனர், R.சரவணகுமார் முன்னிலையில், வனசரக அலுவலர்கள் வே.ப. சுப்ரமணியம், T.கிருஷ்ணன், J.ரவி, K. சிவசந்திரன் உதவி கால்நடை மருத்துவ அலுவலர், வனவர்கள் K.குருநாதன் மற்றும் வன பணியாளர்களுடன் எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது.

இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளது என அதன் முக்கியத்துவத்தை குறித்தும், பாதுகாப்பை உணர்த்தும் விதமாக அன்னை எரிக்கா பள்ளி சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மாவட்ட வன அலுவலர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

யானைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மூலம் கேக் வெட்கப்பட்டு, பின் யானைகளுக்கு ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision