மாடுகளை பிடிக்க விடப்பட்ட டெண்டர் ரத்து - மேயர் அறிவிப்பு

மாடுகளை பிடிக்க விடப்பட்ட டெண்டர் ரத்து - மேயர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டுக்கு உட்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மேயரிடம் தெரிவித்தனர். இதில் திமுக மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் கூறுகையில்..... திருச்சி மாநகரி மாடு பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன்...... திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில்..... மாநகராட்சி பகுதிகளில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கூடுதல் பணியாளர்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும். அதேபோல் மழைநீர் வடிகால் பாதி கட்டியும், பாதி கட்டாமலும் உள்ளது. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாநகர பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை ஆளாகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என தெரிவித்தனர். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என மேயர் தெரிவித்தார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision