திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி  தேர்தல் முடிவுகளில் ஒரு வாக்கு இரண்டு வாக்கில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி  தேர்தல் முடிவுகளில் ஒரு வாக்கு இரண்டு வாக்கில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மரணம், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 ஊராட்சி தலைவர், 19 வார்டு உறுப்பினர்கள் என 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு  இந்த 24 பதவிகளுக்குமான தேர்தல் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெற்றது.

இதில் 3 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மட்டும் அரசியல் கட்சிகள் சார்ந்து அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் கட்சி சார்பின்றி பொது சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்க வாக்கு எண்ணிக்கை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி என்பவர் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடல்மணி பெற்ற வாக்குகள் : 424.கன்னியம்மாள் பெற்ற வாக்குகள் : 423. இரண்டு பேரும் திமுக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு  மொத்தம் : 1150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும்,  5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவானது. இதில் கடல்மணி என்ற கதிரவன் பெற்ற வாக்குகள் : 424 கன்னியம்மாள் பெற்ற வாக்குகள் : 423.
 

 இதில் ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கடல்மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் பூவாளூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான பி. குணசேகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

அந்தநல்லூர் போசம்பட்டி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில்  சுசீலா 207 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுகன்யா விட 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மற்ற பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn