ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Jun 4, 2023 - 06:45
Jun 4, 2023 - 09:20
 243
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாவர் என்ற இடத்தில் 3 இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழுவின் சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க.இப்ராஹிம், பகுதி துணைச் செயலாளர் க.முருகன், உள்ளாட்சி பணிகள் பொறுப்பாளர் சி.சந்திர பிரகாஷ் மற்றும் வை.புஸ்பம் ஆனந்தன், துரைராஜ், நாகராஜ், மௌலானா முருகேசன்,ராஜா,சினிவாசன், ராமமூர்த்தி, ராஜேஸ்வரி, தங்கையன், சசிதரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்‌.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழுவின் சார்பில் ராஜகோபுரம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம் அஞ்சலி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தமிழ்ச்செல்வி, எம் பிரபு, பாபு, தனம், தெய்வானை, பால்ராஜ், சரசு, அர்ஜுனன், அசோக் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn