குற்ற நடவடிக்கையில் கைதாகி பிணையில் வந்தவருக்கு வரவேற்பு - மாநகர் முழுவதும் காரில் ஊர்வலம் கூச்சல் - 100 பேர் மீது வழக்குப்பதிவு - திருச்சியில் பரபரப்பு!!

கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த குருமணிகண்டன் என்பவர் திருச்சி மத்திய சிறையில் குண்டாஸ் சட்டப்பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை சற்று நேரத்துக்கு முன்னதாக பிணையில் மத்திய சிறையை விட்டு வெளியில் வந்தார்.
Advertisement
அப்பொழுது திருச்சி வீர முத்தரையர் முன்னேற் கழக தலைவர் செல்வகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான கார்களும், 500க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து நகர் முழுவதும் கார்களில் கூச்சலுடன் திருச்சி ஒத்தக்கடை பகுதி வரை ஊர்வலமாக வந்தனர். அங்கு உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அப்பொழுது போக்குவரத்துக்கு இடையூறாக பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிகளை சாலையின் நடுவே வைத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உடனடியாக அங்கிருந்து அவர்களை செல்லுமாறு கூறினார். அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காவல் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை எதிர்த்து பேசி சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாநகர் முழுவதும் இதே கூச்சலிட்டு வாகனத்தில் பேரணியாக சென்று உள்ளனர். திருச்சி மத்திய சிறையில் இருந்து கரூர் பைபாஸ் சாலை வரை மாநகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட கார்களில் தொங்கியபடி கூச்சலிட்டு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக ஊர்வலமாக சென்றனர்.
Advertisement
இதனையடுத்து அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொரோனா தொற்றுக்கு காரணமான வகையில் கூட்டம் கூடியது, காவல்துறையிடம் கடுமையாக நடந்து கொண்டு பேரணியாக சென்ற வீர முத்தரையர் முன்னேற்ற கழக மாநில தலைவர் செல்வகுமார் மற்றும் பிணையில் வெளிவந்த குருமணிகன்டன் உள்ளிட்ட 100 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS