சந்திராயன் சந்தோஷம் அடுத்த சந்தோஷம் விரைவில் !!
உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார வல்லரசான சீனாவின் நிலைமை இப்போது பரிதாபமாக உள்ளதாக தெரிகிறது. சீனாவின் சில பெரிய கட்டுமான நிறுவனங்கள் தங்களை திவாலானதாக அறிவிக்கக்கோரி, நோட்டீஸ் கொடுத்துள்ளன. சீனாவில் இருந்து இப்போது வந்து கொண்டிருக்கும் தகவல்கள், சீனா இன்னும் எத்தனை மாதங்களுக்கு பொருளாதார ரீதியாக தாக்கப்பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் தொடரும் மந்தநிலை, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிபுணர்கள் எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும், சொத்துத்துறை அபாயங்கள் அதிகரித்து வருகிறது மற்றொரு சிக்கலை சீனாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதங்களில் ஏற்படும் பெரிய மாற்றங்கள், அந்த நாட்டின் ஏற்றுமதியை பெரும் அளவில் நம்பிக் கொண்டிருக்கும் நாடுகளிலும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது... சீனா கடந்த காலங்களில் பல கடினமான சவால்களை எதிர்கொண்டு, தன்னை நிலை நிறுத்தியுள்ளது. ஆனால், சீனாவின் இப்போதைய சூழல், அதன் 40 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை, முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜிடிபி வளர்ச்சியில் அல்லது மொத்த பொருளாதாரத்தில் 25 சதவிகிதத்தை சொத்துதுறை எனப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வசம் உள்ளது. ஆனால், அந்தத்துறை அடியோடு சரிந்துள்ளது. இது சீனா எதிர்பார்க்காத ஒரு பெரிய சரிவாகும். குறிப்பாக, கரோனாவுக்குப் பின்னர், இந்த சரிவு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், சீனாவில் முதலீடு செய்யும் ஆர்வத்தில் உள்ள சர்வதேச நாடுகள், இப்போது வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளை தேர்வு செய்யத்தொடங்கியுள்ளன.
அதேநேரத்தில், சீனா தொழிற்துறை, மனித ஆற்றல் ரீதியாக இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்த நிலையில், இப்போது இந்தியா தன் இளம் மனித ஆற்றலால், சீனாவை திணறடித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், அமெரிக்கா, வியட்நாம், தைவான், ஜப்பான் என்று பல நாடுகளுடன் சீனா முறைத்துக் கொண்டதால், அதன் வர்த்தக உறவு அதல பாதாளத்தில் உள்ளது. உலகின் முன்னணி தர மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான 'பார்க்லேஸ் 2023'ல் சீனா 4.5 சதவிகித ஜிடிபி வளர்ச் சியை பதிவு செய்யும் என்றும், ஜேபி மோர்கன், நொமுரா ஆகியவை சீனா 5 சதவிகித ஜிபிடி வளர்ச்சியை எட்டாவிட்டால், அதன் மந்தமான பொருளாதார வளர்ச்சி, சர்வதேச பொருளாதாரத்துக்கு பெரிய அழிவாக, அடியாக இருக்கும் என்று கவலை தெரிவித்துள்ளன.
இது சீனாவின் 40 ஆண்டுகளாக தொடரும் அசுரத்தனமாக பொருளாதார வளர்ச்சிக்கு முடிவு கட்டும் சகாப்தமாகவும் இருக்கலாம். என்கிறார்கள் நிபுணர்கள். இந்தியாவை பின்னுக்குத்தள்ள வேண்டும் எனக்கருதி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்ற குட்டி நாடுகளுக்கு அதிக அளவில் கடனை வாரி வழங்கி தன்னை முன்னைலைப்படுத்த முயன்றதும் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision