சென்னை-காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்கள் ரத்து- ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை-காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்கள் ரத்து- ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17, 20, 21, 23, 24, 27, 28 மற்றும் மார்ச் 3 ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை-மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளன. பாண்டியன் ரெயில், சிலம்பு ரெயில் ஆகியவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்:- பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

1. முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: பிப்ரவரி 16, 17, 19, 23, 24, 26 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) மற்றும் பிப்ரவரி 17, 18, 20, 24, 25, 27 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779)

(II) பிப்ரவரி 16, 17, 20, 21, 23, 24, 27, 28 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605). பிப்ரவரி 17, 18, 21, 22, 24, 25, 28 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606).

(III.)  பிப்ரவரி 16, 18, 23, 25 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சென்னை மஹால் விரைவு ரயில் (22624), பிப்ரவரி 17, 19, 24, 26 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623).

IV.  பிப்ரவரி 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பிப்ரவரி 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862).

V.  பிப்ரவரி 27, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), பிப்ரவரி 28 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658)

VI.  மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628).

VII.  மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரயில் (12667),  மார்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668)

VIII.  மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868), ஆகிய அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

I. பிப்ரவரி 10 முதல் மார்ச் 5 வரை சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் அதிவிரைவு ரயில்கள் (22671/22672),திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

II.  பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

III.  பிப்ரவரி 16 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை  சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

IV.  பிப்ரவரி 9, 16 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில் (22631), மதுரை - கூடல் நகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

V.  பிப்ரவரி 23, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில் பிப்ரவரி 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பிகானீர் -  மதுரை விரைவு ரயில் (22632) ஆகியவை மதுரை - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

VI.  பிப்ரவரி 14, 16, 21, 23 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி விரைவு ரயில் (12652) மற்றும் பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) ஆகியவை மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

VII.  பிப்ரவரி 28 அன்று புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிரந்தி விரைவு ரயில் (12652), திண்டுக்கல் வரை இயக்கப்படும். 

VIII.  பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காச்சிகுடா  - மதுரை விரைவு ரயில் (17615) மற்றும் பிப்ரவரி 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - காச்சிகுடா  விரைவு ரயில் (17616) ஆகியவை திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

IX.  பிப்ரவரி 15, 22 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை குர்லா - மதுரை விரைவு ரயில் (22101) மற்றும் பிப்ரவரி 17, 24 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - மும்பை குர்லா விரைவு ரயில் (22102) ஆகியவை விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

X.  மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16106) மற்றும் பிப்ரவரி 28 மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

XI.  பிப்ரவரி 12, 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பனாரஸ் - ராமேஸ்வரம் (22536), பிப்ரவரி 15, 22 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய  ராமேஸ்வரம் - பனாரஸ்  விரைவு ரயில் (22535) ஆகியவை விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

XII.  பிப்ரவரி 18, 25 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய அஜ்மீர் - ராமேஸ்வரம் ரயில் (20973) மற்றும் பிப்ரவரி 21, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - அஜ்மீர் விரைவு ரயில் (20974) ஆகியவை விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

XIII.  பிப்ரவரி 24, 25 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை சிலம்பு ரயில் (20681) மற்றும் பிப்ரவரி 25, 26 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் (20682) ஆகியவை காரைக்குடி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

XIV.  மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

XV.  பிப்ரவரி 6 முதல் மார்ச் 4 வரை விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867) மற்றும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 5 வரை மதுரை - விழுப்புரம் ரயில் (16868) ஆகியவை திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

XVI.  மார்ச் 1, 2, 3 ஆகியநாட்களில் மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847) மற்றும் மார்ச் 2, 3, 4 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) ஆகியவை திருச்சி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

3. அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:
I. பிப்ரவரி 23 முதல் 28 வரை மற்றும் மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27 வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரைரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

II.  பிப்ரவரி 9 முதல் மார்ச் 1 வரை மற்றும் மார்ச் 5 & 6 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

III.  பிப்ரவரி 5 முதல்  மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

IV.  பிப்ரவரி 9, 12, 16, 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16352) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில்நின்று செல்லும்.

V.  பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹவுரா ரயில் (12666)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

VI.  பிப்ரவரி 11, 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் (16354) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியரயில் நிலையங்களில் நின்று செல்லும்

VII.  பிப்ரவரி 5, 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா - நாகர்கோவில் ரயில் (16353) திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

VIII.  பிப்ரவரி 23 முதல் மார்ச் 2 வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12662)விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

IX.  பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில் (12632), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (12631) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

X.  பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை ரயில் (16102)  விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

XI.  மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதோடு மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn