சேவல் சண்டை சூதாட்டம் - 7 பேர் கைது, 7 சேவல்கள் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள், 6000 ரூபாய் பறிமுதல்

சேவல் சண்டை சூதாட்டம் - 7 பேர் கைது, 7 சேவல்கள் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள், 6000 ரூபாய் பறிமுதல்

தமிழகத்தில் சேவல் சண்டை போட்டி தடை செய்யப்பட்டுள்ளது. சேவல் சண்டைகள் நடத்தப்பட்டால் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ரகசியமாக சேவல் சண்டையில் ஈடுபட்டு சூதாட்டத்தில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் இருங்கலூர் பகுதியில் எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி அருகே காட்டுப்பகுதியில் சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ் பி வருண்குமார் உத்தரவின் பெயரில், லால்குடி டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிப்படையினர் அமைத்து 20க்கும் மேற்பட்ட போலீசார் இருங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மப்டியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 சினிமா பட பாணியில் ஆங்காங்கு ஒவ்வொரு இடமாக நுழைந்து ரகசியமாக சோதனையிட்டனர். அப்போது இருங்களூரில் உள்ள தனியார் (SRM) மருத்துவமனையிக்கு பின்புறம் உள்ள தோப்பில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் சிலர் ஈடுப்பட்டு இருந்தனர். இதையடுத்து போலீசாரை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 7 பேரை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் இருங்களூர் பகுதியை சேர்ந்த அனீஸ் அஹமத் (23), கணேசமூர்த்தி (38), சுரேஷ் (44), பூபதி (34), ஜான் நெப்போலியன் (45) , அஜித் (25) மற்றும் சிறுவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 7 சேவல், 12 மோட்டார் சைக்கிள்கள், 7 செல்போன்கள் மற்றும் ரூ.6000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்த காவல்துறையினருக்கு எஸ் பி வருண்குமார் மற்றும் லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா மற்றும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision