திருச்சியில் உள்ள கல்லூரியில் வால் நட்சத்திர திருவிழா

திருச்சியில் உள்ள கல்லூரியில் வால் நட்சத்திர திருவிழா

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி  நேரு நினைவுக் கல்லூரியில் வால் நட்சத்திர திருவிழா இயற்பியல் துறை மற்றும் NMC ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரி தலைவர் பொறியாளர் பொன் பாலசுப்பிரமணியம் இந்த வால் நட்சத்திர திருவிழாவை தொடங்கி வைத்தார்.

கல்லூரி செயலர் பொன் ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் பொன் பெரியசாமி, துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வைத்தனர். பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அருகில் வந்தது. இந்த வால் நட்சத்திரம் பூமியை ஒருமுறை சுற்றி முடிக்க 50,000 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் இந்த வால்நட்சத்திரம் தனித்துவமானது என பெரும்பாலானோர் கருதுகின்றனர். விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் ஆன கோள வடிவிலானதுதான், வால் நட்சத்திரம்.

வால் நட்சத்திரங்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும்போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்றுகிறது. இது, வால் நட்சத்திரத்தில் உள்ள ஐஸ் கட்டி, சூரியனின் வெப்பத்தால் உருகுவதால் தோன்றுகிறது. C/2022 E3 (ZTF) எனும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரமும் பனி மேகத்தில் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகளின் கூறுகின்றனர். இந்த வால்நட்சத்திரத்தில்  இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்த ஈரணு மூலக்கூறு வடிவில் கார்பன் உள்ளது. மேலும் இந்த வால்மீனில் சயனசன் மூலக்கூறுகளும் செறிவாக உள்ளன.

இந்த மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வரும் ஏழு நிறங்களில் பச்சை நிறத்தைத் தவிர மற்ற எல்லா நிறங்களையும் உட்கவர்ந்து கொள்ளும் பச்சை நிறம் பிரதிபலிப்பதால் இந்த வால்மீன் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது. வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய தகவல்களை வழங்க முடியும். இது பிரபஞ்சத்தைப் பற்றிய பல ரகசியங்களை வெளிப்படுத்தும். இந்த விழாவில் பச்சை நிற வால்நட்சத்திரம் நவீன தொலைநோக்கி வழியாக காண்பிக்கப்பட்டது.

மேலும் சூரிய குடும்ப கோள்கள் வியாழன் வியாழனின் நிலாக்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் அழகிய நிலா ஆகியவை தொலைநோக்கி வழியாக நேரடியாக பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn