திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பரோபரியாக சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தொடக்கம்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பரோபரியாக சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தொடக்கம்

திருச்சிராப்பள்ளி மாமன்ற தீர்மான எண்.86, நாள் 30.04.2013இல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதார துணை உரியமுறையில் பராமரிக்கவும் சாக்கடை கட்டுமானங்களை பாதுகாத்து நோய் பரவுவதை தடுக்கவும் பரோபரியாய் திரியும் கால்நடைகளில் இருந்து பிரதான சாலை போக்குவரத்து இடையூறின்றி உறுதிப்படுத்தவும் குதிரை மற்றும் பன்றி வளர்ப்பதினை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழ் எண் 8, நாள் 13.09.2013 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பன்றிகள் பரோபரியாய் சுற்றித் திரிந்து வருகின்றன. எனவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாய் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி 01.12.2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது என திருச்சி மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn