திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனு மீதான குறைகள் தீர்க்கும் முகாம் - 67 மனுக்கள் மீது முடிவு!!
திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள், இணைய வழியில் பெறப்படும் புகார்கள், வாட்ஸ்சப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை பொதுவான இடத்திற்கு வரவழைத்து மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டதன் பேரில் 05.12.2020 அன்று திருச்சி மாநகர அனைத்து சரகங்களிலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
Advertisement
அதன்படி 05.12.2020 அன்று 4 இடங்களில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய சரகத்தில் சீனிவாச மஹாலிலும், பொன்மலை சரகத்தில் எஸ்.ஐ.டி வளாகத்திலும், கோட்டை சரகத்தில் சந்தன மஹாலிலும் மற்றும் ஸ்ரீரங்கம் சரகத்தில் காவேரி மஹாலிலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
இதில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மனுதாரர்களையும், எதிர்மனுதாரர்களையும் நேரடியாக வரவழைக்கப்பட்டு இன்று 86 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. அதில் 84 மனுதாரர்களும், 80 எதிர்மனுதாரர்களும் ஆஜராகி இருந்தனர். இருதரப்பையும் விசாரணை செய்து மேற்படி 84 மனுக்களில் 67 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.
Advertisement
பொதுமக்களின் நலன் கருதி ஒரே நாளில் புகார் மனு மீது விசாரணை செய்யப்பட்டு ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS