ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கான்கீரிட் பெயர் பலகை மற்றும்  கான்கீரிட் சுவர் இடிப்பு.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கான்கீரிட் பெயர் பலகை மற்றும்  கான்கீரிட் சுவர் இடிப்பு.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஶ்ரீகத்ரிதயாராம் சிவ்ஜி கட்டளைக்கு சொந்தமான நிலம் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் பின்புறம் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

மேற்படி கட்டளைக்கான சொத்துக்கள் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி கட்டளை அறங்காவலரால் 30.07.2012 அன்று திருக்கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த இடம் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமானது என்று அங்கு கான்கீரிட் பெயர் பலகை மற்றும் சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இடத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கறிஞர் ஆதிநாராயணன் மூர்த்தி மற்றும் அவருடன் இருந்த நபர்களிடம் திருக்கோயில் பணியாளர்கள் கேட்டதில் திருக்கோயில் தான் எங்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜேசிபி எந்திரத்தை கொண்டு பெயர் பலகை மற்றும் சிற்றுச்சுவரை இடித்து தள்ளி உள்ளனர்.

இதுப்பற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து இடத்தை பார்வையிட்டு பின்னர் இதுக்குறித்து ஶ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் திருக்கோயில் உடன் இணைந்த தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அத்துமீறி நுழைந்து கான்கிரீட் அறிவிப்பு பலகை மற்றும் சுற்றுச் சுவர்களை இடித்து தள்ளி அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே இடத்தில் மீண்டும் அதனை அமைத்திட வேண்டும் இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF