தொடரும் மழை - தயாராகும் வாடிவாசல் - திருச்சி சூரியூரில் முதல் ஜல்லிக்கட்டு!!

தொடரும் மழை - தயாராகும் வாடிவாசல் - திருச்சி சூரியூரில் முதல் ஜல்லிக்கட்டு!!

Advertisement

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், சூரியூர் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரபலமானது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல்களும் தயாராகி வருகின்றன.

Advertisement

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. 
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 4 விண்ணப்பங்கள் வந்த நிலையில் சூரியூரில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது. 

பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இவ்வாண்டு திருச்சி மாவட்டத்தில் சூரியூர், பொத்தமேட்டுபட்டி, தெற்கு இருங்களூர், ஆவாரங்காடு ஆகிய நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பங்கள் வந்திருந்த  நிலையில் சூரியூரில்  மட்டுமே இம்மாதம் (ஜனவரி ) நடத்த  தற்போது அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பிரசித்தி பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை மறுதினம் 15ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 550 காளைகளும் 300 வீரர்களும் பங்கு பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இறுதிக்கட்டத்தில் இதற்காக தொடர் முயற்சி மேற்கொண்ட  முன்னாள் எம்.பி ப.குமார், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோருக்கு கிராம மக்கள், விழாக்குழுவினர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a