கொரோனா கற்றுதந்த மனிதநேயம் - 2021 கொரானாவில் கடந்து வந்த பாதை

கொரோனா கற்றுதந்த மனிதநேயம் - 2021 கொரானாவில் கடந்து வந்த பாதை

வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2021 காட்டியிருக்கிறது.

பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்த முடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக மாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியென்றால் இத்தனை இறப்புகளுக்கும், துன்பங்களும் ஏன் ஏற்பட்டன? காரணம் மோசமான அரசியல் முடிவுகளே. கோவிட்‍-19 ன் காலகட்டம் அவ்வாறு இல்லை. ஏனெனில் டிசம்பர் 2019 ல் ஒரு புதிய தொற்று பரவக்கூடும் என்ற முதல் எச்சரிக்கை ஒலித்த ஒரு மாதத்திலேயே, சரியாக சொல்வதென்றால் ஜனவரி 10 2020 அன்று அறிவியல் அறிஞர்கள் கொரோனா தொற்றிற்க்கு காரணமான வைரஸை அடையாளப்ப‌டுத்தி மட்டுமில்லாமல் அதன் மரபணு பற்றிய விவரங்களையும் (genome) இணையத்தில் வெளியிட்டனர்.

சில மாதங்களிலேயே அதனைக் கட்டுப்படுத்துவது, மற்றும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதும் கண்டறியப்பட்டு விட்டது. ஒரு வருடத்திற்குள்ளாகவே அதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பெருமளவிலான உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. மனித குலத்திற்கும், தொற்று நோய்களுக்குமான யுத்தத்தில் மனிதகுலம் இத்தனை வலிமையாக இதுவரை இருந்ததில்லை.

திருச்சி போன்ற 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்நகரத்தில் ரயில் போக்குவரத்து விமான போக்குவரத்தில் என்று பல போக்குவரத்து வசதிகள் திருச்சியில் அதிக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது.

மே ஜூன் ஜூலை மாதங்களில் கொரானா எண்ணிக்கையை உச்சத்தை எட்டியது. நாளொன்றுக்கு 1000 என்ற எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர் பரவியது ஆக்சன் பற்றாக்குறை மருத்துவமனை படுக்கை வசதி என்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த போதும் திருச்சி மாநகராட்சியும் மருத்துவத் துறையும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை சரிவர குறையை வைத்தனர். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என்று உணவில்லா மக்களுக்கு உணவு, ஆக்சிஜன் படுக்கை வசதி வசதிகள் என்று தங்களால் முடிந்தவரை மக்களுக்கு உதவி வந்தனர். தடுப்பூசி கண்டறிந்த பின்னர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் திருச்சி மாநகராட்சி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பல்வேறு முகாம்கள் நடத்தினர்.

திருச்சி 4 மண்டலங்களிலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதை முறையான நடவடிக்கைகளோடு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று மெகா தடுப்பூசி முகாம்கள் என்று பல முயற்சிகள் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா என்னும் பெரும் தொற்று பற்றிய விழிப்புணர்வும், தடுப்பூசி போடுவதன் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதாரத்துறையினால் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாகப் பொதுமக்களுக்குத் தடுப்பு ஊசி செலுத்தி, தமிழகத்திலுள்ள 46 சுகாதார மாவட்டங்களில் 4-வது இடத்தையும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 6-வது இடத்தையும் திருச்சி மாவட்டம் பெற்றுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc 

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn