மாநகராட்சி கழிவுநீர் வடிகால் பணி நிறுத்தம் - பொதுமக்கள் அவதி.

மாநகராட்சி கழிவுநீர் வடிகால் பணி நிறுத்தம் - பொதுமக்கள் அவதி.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் 1வது வார்டு பகுதியில் மூலத்தோப்பு ஸ்ரீரங்கம் கோர்ட் செல்லும் சாலையில் மலையப்ப நகர் உள்ளது. அங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

ஆனால் மலையப்ப நகரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மெயின் வடிகாலில் இணைக்காமல் பணியை அரைகுறையாக செய்து விட்டு 35 மீட்டர் இடைவெளி மட்டும் வடிகால் அமைக்காமல் ஒப்பந்ததாரர் அப்படியே விட்டு சென்றுள்ளார். இதனால் மாத கணக்கில் கழிவுநீர் செல்ல வாட்டம் இல்லாமல் அங்கேயே தேங்கி புழுக்கள், கொசுக்கள் உற்பத்தி மையமாகவும் மற்றும் துர்நாற்றத்தால் அங்குள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் இவ்விடத்தை முறையாக ஆய்வு செய்து மீதமுள்ள கழிவு நீர் வடிகாலை முறையாக செட் பண்ணிட்டு மக்களை நோய் நொடியில் இருந்து காக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision