குடியிருப்பு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையை திறக்க விடாமல் DYFI அமைப்பினர் தர்ணா போராட்டம்

குடியிருப்பு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையை திறக்க விடாமல் DYFI அமைப்பினர் தர்ணா போராட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறை பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. 50 மீட்டர் இடைவெளியில் இந்த இரண்டு கடைகளும் அமைந்துள்ளது.

இதில் கடை எண் 10311 குடியிருப்புக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு மது வாங்குவார்கள் சாலையின் ஓரத்தில் மது அருந்திவிட்டு அநாகரிக முறையில் நடந்து கொள்வதாகவும் அதேபோல் ஆபாச வார்த்தைகள் பேசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பெண்களும், சிறுவர்களும் அந்த பகுதியை கடக்க முடியாமல் அச்சத்துடன் இருப்பதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், இந்தப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கண்டிப்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால் தற்போது வரை இந்த கடையை அகற்றாமல் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க வந்த ஊழியர்கள் வந்தபோது திறக்க விடாமல் கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிழக்கு தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இந்த கடை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn