கறவை மாட்டுடன் தேசிய நெடுஞ்சாலையில் பாலை கொட்டி சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நொச்சிமேட்டில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பால் கொள் முதல் விலையை உயர்த்த கோரி கறவை மாட்டுகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் பாலை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மணப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நாள்தோறும் சுமார் 20,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் தேவைகளுக்கு போக மீதி பாலை திருச்சி ஆவின் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 2000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக உள்ள நிலையில், இங்கு பால் ஒரு லிட்டர் பால் 33.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதை 45 ரூபாயாக உயர்த்தி கொடுக்கக் கோரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மணப்பாறை அடுத்த நொச்சி மேடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கறவை மாடுகளுடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn