திருச்சியில் மின்கம்பம் அருகே விளையாடிய சிறுவன் உயிரிழப்பு - விசாரணை

திருச்சியில் மின்கம்பம் அருகே விளையாடிய சிறுவன் உயிரிழப்பு - விசாரணை

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியில் உள்ள பள்ளிவயல் கிராமத்தில் வசிக்கும் செளந்தரராஜன் மகன் மகிலேஷ். ஏழு வயதான சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது கிராமத்தில் உள்ள தெரு விளக்கு மின்கம்பத்தை சுற்றி வந்தான் . திடீரென  தெருவிளக்கு மின் கம்பத்தினை பிடித்து விளையாடிய போது எர்த் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மின் கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn