திருச்சியில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்ட பயிற்சி வகுப்புகள்

திருச்சியில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்ட பயிற்சி வகுப்புகள்

ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம். இந்த திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு அங்கமாகும் ( National rural lively hood mission ) இரு வகையான நோக்கங்களை கொண்டது இந்த திட்டம். ஊரக ஏழ்மை குடும்பங்களின் வருமானத்தை ஊக்குவித்தல் மற்றும் ஊரக இளைஞர்களை தொழில் சார்ந்து இணைக்க அவர்களின் திறமையை ஊக்குவித்தல் போன்றவையாகும்.

திருச்சி தீரன் நகரில் செயல்பட்டு வரும் DDU-GKY ட்ரெய்னிங் சென்டரில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்பு கூடிய இலவச பயிற்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளது.CRS -customer retail&sales,

Tourism & Hospitality Manegment,

Logistic & supply chain management 

நான்கு மாத பயிற்சிகளாக மூன்று பிரிவுகளில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. அது மட்டுமின்றி கணினி, ஆங்கில பயிற்சி, தட்டச்சு, திறன் வளர்ப்பு தொழில் நுட்ப போன்றவற்றிற்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிற பட்டப் படிப்பு படித்தவர்களாக இருந்தாலும்18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள். இதில் இணைந்து பயிற்சி பெறலாம்.

வருமானம் குறைவான ஊரக இளைஞர்களை திறன் பெற்றவர்களாக மாற்ற உருவாக்கப்பட்டது. இதற்கு திறன் இந்தியா திட்டமும் ( Skill India Campaign ) உதவுகிறது . இந்த திட்டமானது ஒரு முக்கியமான செயல்திட்டத்தை முன்னெடுக்க அரசின் பல சமூக பொருளாதார திட்டங்களுக்கு ( Make in India, Digital India, Smart cities, Start Up India, Stand up India ) உறுதுணையாக உள்ளது .

தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பயன்கிட்டுகிறது. அவர்களுக்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் திறன்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய திட்டம், சமூகரீதியாகப் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 50 % சிறுபான்மையினர் 15% பெண்கள் 33% என்று திறன் பயிற்சி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். பயிற்சிக்கு முக்கியத்துவம் என்பதை மாற்றி, வேலையில் உயர்வு என்பதற்கு முக்கியம் அளிக்கப்படும். அதனால், தற்போது ஒரு வேலையில் இருப்பவர் தொடர்ந்து அதில் நீடிக்க வகைசெய்வதுடன் அந்த வேலையில் முன்னேற்றம் கிடைக்கவும்., வாய்ப்புகள் இருந்தால் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

வேலைநியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலைநியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுத் தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காகப் புதிய இடத்திற்குச் செல்வதற்கு அங்கு தங்கியிருப்பதற்கான உதவிகளும் செய்து தரப்படும்.

வேலை நியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலைநியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுத் தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காகப் புதிய இடத்திற்குச் செல்வதற்கும் அங்கு தங்கியிருப்பதற்குமான உதவிகளும் செய்து தரப்படும். பயிற்சி பெற்ற அனைவரும் பரஸ்பரம் தொடர்பில் இருப்பதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படும். பயிற்சி பெறுகிறவர்கள் வேலை நியமனம் பெறுவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். பயிற்சி பெற்றவர்களில் குறைந்தப்பட்சம் 75 சதவீதம் பேராவது வேலை பெறுவது உறுதி செய்யப்படும். பயிற்சி திட்டத்தைச் செயல்படுத்தும் பங்காளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துதல். கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் அளிக்கக்கூடிய புதிய முகமைகளை உருவாக்குவதுடன், அந்த முகமைகளின் பயிற்றுவிக்கும் திறன்களும் வளர்த்தெடுக்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO