திருச்சியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

திருச்சியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

திருச்சி மிளகுபாறை கோரிமேடு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதை  கண்டித்து DYFI அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

திருச்சி மிளகு பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக அந்த வழியே செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இதனை கண்டித்து DYFI சேகுவேரா  கிளை அமைப்பினர் சார்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் DYFI மாவட்ட செயற்குழு R.சேதுபதி தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பின் தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலம் அப்பகுதியில் நடவடிக்கை எடுத்தனர்.