டீசல், பெட்ரோல், கேஸ், உயர்வை கண்டித்து திருச்சியில் 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

டீசல், பெட்ரோல், கேஸ், உயர்வை கண்டித்து திருச்சியில் 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த 10 தினங்களாக தினசரி டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளை மத்திய அரசு உயர்த்தியதன் மூலம் வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் என அனைவரும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். வருமானம் இல்லாமல் நொந்து போய் இருக்கிற ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக மாறியுள்ளது.

இந்த விலை உயர்வுகளால், அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, உதவி செய்ய மாட்டோம், ஆனால் வருமானத்தை பறிப்போம் என்கிற செயலாக உள்ளது. ஏற்கனவே தொழில் நெருக்கடியில் சிக்கி வருமானம் இல்லாமல் தவிக்கின்ற தொழிலாளர்களை இந்தக் கட்டண உயர்வுகள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இதர வாகன ஓட்டிகளுக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து உயர்த்திய டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜங்ஷன் பகுதி செயலாளர், MI.ரபிக் அஹமத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரில் 4 இடங்களில் பெட்ரோல் நிலையத்திற்கு முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO