மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஏமாற்றம்

மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஏமாற்றம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கால்நடை சந்தையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வாங்க, விற்க ஏராளமானோர் வருவார்கள். இந்நிலையில் சாதரணமாக நாட்களை விட பண்டிகை நாட்கள் நெருங்கும் போது ஆட்டுகளின் எண்ணிக்கையும், விலையும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நேற்று (27.10.2021) நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டின் விலை மிகவும் குறைந்தே காணப்பட்டது வழக்கமாக ஒரு ஆடு 15 ஆயிரத்துக்கு விற்றால் பண்டிகை காலங்களில் 500 ரூபாய் கூடுதலாக விற்பனையாகும். ஆனால் நேற்று வழக்கமாக விலையை விட குறைவான விலைக்கே விற்பனை ஆனது.

இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் நீண்ட நேரமாகியும் விற்பனை ஆகாததாலும், போதிய விலை கிடைக்காததாலும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த ஆடுகளை வியாபாரிகள் மீண்டும் திரும்ப எடுத்துச் சென்றனர் இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn