திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அப்புறப்படுத்தப்படும் - தனியார் நிறுவனம் சார்பில் நோட்டீஸ்

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அப்புறப்படுத்தப்படும் - தனியார் நிறுவனம் சார்பில் நோட்டீஸ்

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி கொள்வதற்கு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது .

தஞ்சாவூர் கி.மீ. 80.000 முதல் திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை கி.மீ. 136.490 வரை என் எச் - 67 தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குரிய நிலங்கள் சாலையின் இருபுறங்களிலும் உள்ளன. இதன்படி அரியமங்கலம் பால்பண்ணை, ரைஸ்மில், ரயில்நகர், ஆயில்மில், காட்டூர், கைலஷ்நகர், மஞ்சத்திடல், விண்நகர், பாலாஜிநகர், மலைக்கோயில், தி.நகர், திருவெறும்பூர்,

பெல் கணேசா, பெல் ட்ரைனிங் சென்டர், அரசு கல்லூரி பகுதி, அண்ணா வளைவு, பெல்நகர், துவாக்குடி, தேவராயநேரி, புதுக்குடி வரை ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் நிலங்களாகவும், வீடுகளாகவும், மேற்கூரைகளாகவும் ஆக்ரமிப்புகள் செய்யப்பட்டுள்ள இடங்களை வரும் 7ந் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டுமாறும்,

தவறினால் 8ந் தேதி தாங்கள் வந்து ஆக்ரமிப்புகளை அகற்றுவோம் என அத்துறை அதிகாரிகள் சாலையின் இருபுறங்களிலும் உள்ளோரிடம் நோட்டீஸூகளை வழங்கி கையெப்பம் பெற்றுச் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision