40வது வார்டு பகுதியில் அவலநிலை - அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

40வது வார்டு பகுதியில் அவலநிலை -  அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாநகராட்சியில் 40வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான திருவெறும்பூர் மலைக்கோவில் மாதா கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தப் பகுதியில் அடிப்படைத் தேவைகளான கழிவு நீர் வடிகால் இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவு நீர் அனைத்தும் அருகில் உள்ள காலியாக உள்ள வீட்டு மனைகளில் தேங்கி நிற்கிறது.

அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் பல வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளதாகவும், அதனால் அதை பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலை இருக்கிறது

அந்த பொதுக்கழிப்பீடத்தில் பைப்புகள் மற்றும் கழிப்பிட பேஷன்கள் உடைந்து இருப்பதாகவும் இதை உடனடியாக சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்பட்டு அனைத்து கழிவுநீர்களும் செல்லும் வகையில் கழிவு நீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், திருச்சி மாநகராட்சிக்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision