நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையில் செயல்படும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், விடுபட்ட நரிக்குறவர் இன மக்கள் நரிக்குறவர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். 

ஏற்கனவே உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்:0451-2401860 தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நல உதவிகள்  விபத்து ஈட்டுறுதித்திட்டத்தின் கீழ் உதவித்தொகை:

விபத்தினால் மரணம் ரூ.1,00,000,
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10,000-முதல்1,00,000,
இயற்கை மரணம் - ரூ.20,000,

ஈமச்சடங்கு செலவினம் - ரூ.5,000

கல்வி உதவித்தொகை:

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு ரூ.500,

6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.1000

10-ஆம் வகுப்பு வரை படித்து வரும் பெண்குழந்தைகளுக்கு ரூ.1000

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (இருபாலருக்கும்) ரூ.1000,
 11 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000- 12 ஆம் வகுப்பு படித்து வரும் பெண்
குழந்தைகளுக்கு ரூ.1500,

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (இருபாலருக்கும்) ரூ.1500, முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1500/- மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட படிப்பிற்கு ரூ.1,750 ,

முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4,000-, மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ.6,000.


தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு ரூ.4,000- மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற்கல்வி பட்ட படிப்பிற்கு ரூ.6,000 

ஐடிஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு ரூ.1,000 மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ஐ.டி.ஐ அல்லது பல்தொழில் பயிற்சி படிப்பிற்கு ரூ.1,200

திருமண உதவித்தொகை ரூ.2000 

மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000- வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6000 கருச்சிதைவு/கருக்கலைப்பு ரூ.3000

மூக்குக்கண்ணாடி செலவுத் தொகையை ஈடுசெய்தல் ரூ500

முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000

தொழில்தொடங்க மானியம் :

தனிநபர் தொழில் தொடங்க மான்பம் ரூ.7500

குழுவாகத் தொழில் தொடங்க மானியம் ரூ.10000- தனிநபருக்கு (அ) ரூ.1,25,000- அதிகபட்சமாக குழுவிற்கு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசீத்து வரும் நரிக்குறவர் இனத்தை சார்ந்தவர்கள் நலவாரியத்தால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு   திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn