தீபாவளி பண்டிகை - திருச்சியில் டாஸ்மாக் மது விற்பனை விபரம்

தீபாவளி பண்டிகை - திருச்சியில் டாஸ்மாக் மது விற்பனை விபரம்

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, வெடி வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாக மதுப்பிரியர்கள் ஏராளமானோர் டாஸ்மார்க் கடைகளில் முட்டி மோதிக் கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனர்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகை அன்று (12.11.2023) திருச்சி மண்டலத்தில் ஒரு நாளில் 56 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனையாகியுள்ளது. நேற்றைய முன்தினம் 52 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சி மண்டலம் என்பது 11 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 1035 டாஸ்மாக் கடைகள் உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision