டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற திருச்சி பள்ளி முதல்வர்

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற திருச்சி பள்ளி முதல்வர்

திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் டீ.பாவைக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதினை சென்னை கலைவாணர் அரங்கத்தில் (5.9.2023) அன்று நடைபெற்ற விழாவில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

விருது பெற்ற பள்ளி முதல்வரை வரவேற்கும் நிகழ்வானது நடைபெற்றது. அவருக்கு மாலை அணிவித்து மேல தாளத்துடன் பட்டாசு வெடித்து பூரண கும்பம் மரியாதை, ஆரத்தி காட்டி, வேடமிட்ட கிருஷ்ணர் ராதை குழந்தைகள் மலர்களை பரிசாக தந்து ஆசிரியர்கள் மலர் தூவி பள்ளியின் நிர்வாகத் தலைவரும், துணைவியாரும் உடன் வர சிறப்பாக நடந்தது.

வாசவி வித்யாலயா பள்ளியின் தலைவர் டாக்டர் ஏ.மாதவ மனோகரன் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து முதல்வரை வாழ்த்தி உரையாற்றினார். மேலும் முதல்வரை பாராட்டி ஆசிரியர்களும், மாணவர்களும் சிறப்பு ரை வழங்கினர். நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

முதல்வர் மரக்கன்று நடும் நிகழ்வுடன் விழா இனிதே நிறைவுற்றது. விருது பெற்ற முதல்வரால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமிதம் கொள்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision