திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் - இன்று வேட்பு மனுத்தாக்கல் 

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் - இன்று வேட்பு மனுத்தாக்கல் 

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மரணம், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 ஊராட்சி தலைவர், 19 வார்டு உறுப்பினர்கள் என 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 பதவிகளுக்குமான தேர்தல் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மட்டும் அரசியல் கட்சிகள் சார்ந்து அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் கட்சி சார்பின்றி பொது சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும், தலைவர் பதவிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn