சாலையின் நடுவே மின் கம்பம் - வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையின் நடுவே மின் கம்பம் - வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட 43 வார்டு காட்டூர் விக்னேஷ் நகர் 6வது தெரு மேற்கு விஸ்தரிப்பில் சாலை நடுவில் தெரு விளக்கு மின் கம்பம் உள்ளது. இதனால் பைக், கார் மற்றும் பள்ளி வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வளைவுகளில் திரும்பும் வாகனங்கள் இதில் மோதி விபத்துக்குள்ளாகிறது.

சாலையின் நடுவில் உள்ள இந்த மின்கம்பத்தில் எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஒளிரும் குறியீடுகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலை நடுவே உள்ள இந்த மின் கம்பத்தை அகற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் மேயரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உயிரிழப்பு ஏற்படும் முன் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision