முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

துறையூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வதுபிறந்த நாளை முன்னிட்டு ஓபிஎஸ் & இபிஎஸ் அணியினர் போட்டி போட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 அதன் ஒரு பகுதியாக துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் இபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையிலும் துறையூர் பாலக்கரை பகுதியில் ஓபிஎஸ் அணி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையிலும்ம் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

 இரு தரப்பினரும் பொதுமக்களுக்கு மாறி மாறி நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கியது பொது மக்களிடையே பேசும் பொருளாக மாறியது இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து இருந்தால் இன்னும் நிறைய சாதனைகளை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision