திருச்சியில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

திருச்சியில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள உணவகத்தில் நேற்று (02.12.2023)-ம் தேதி ஒரு நபர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி, அவ்வுணவகத்தில் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும். இல்லையெனில், நான் கூறுகின்ற செல் நம்பருக்கு ரூ.10,000/- அனுப்புமாறு கூறியதாகவும். ஆனால், உணவகத்தினர் உணவகத்தின் உரிமையாளர் வந்ததும். அனுப்புகிறோம் எனக்கூறியதாகவும் தெரியவருகிறது. (பணம் அனுப்பப்படவில்லை). 

அதன் பிறகு உணவகத்தின் உரிமையாளர் மேற்படி உணவு பாதுகாப்பு அதிகாரியாக வந்தவரை பற்றி விசாரணை செய்த போது, மேற்படி நபர் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக இல்லை என தெரியவந்தது. உடனடியாக உணவகத்தின் உரிமையாளர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 -ஐ தொடர்பு கொண்டு மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண்குமார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு. ஒரு தனிப்படையினை நியமித்து மேற்கண்ட போலி நபரை பிடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில், தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, உணவு பாதுகாப்பு அதிகாரியாக ஏமாற்றிய திருமுருகன் (44) த/பெ சுப்ரமணியம், 5/203. பாரி நகர். 5-வது தெரு, வடக்கு காட்டூர். திருவெறும்பூர், திருச்சி மாவட்டம் என்பவரை கைது செய்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு மண்ணச்சநல்லூர் காவல் நிலைய குற்ற எண்.379/23 U/s 294(b). 170. 506(1) IPC-யின் படி வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேற்கண்ட திருமுருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும். இவர் B.E மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்சமயம் மண்ணச்சநல்லூர் DK IAS அகாடமியில் பணிபுரிந்து வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில், மேற்படி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும், இவர் மீது கோயம்புத்தூர். நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயுத வழக்குகள், மோசடி வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision