திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் குடும்ப விழா

திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் குடும்ப விழா

தமிழ்நாடு வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்துடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட வீடியோ மட்டும் போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் குடும்ப விழா வருகிற (28.07.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையிலுள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சியில் திருச்சி ரானா மருத்துவமனை தலைமை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி, ஸ்ரீ விக்னேஷ் குரூப் ஆஃப் எஜுகேஷன் இன்ஸ்டியூட் மேனேஜிங் டிரஸ்ட் லட்சுமி பிரியா கோபிநாத் கலந்து கொள்ள உள்ளனர். இச்சங்கத்தின் தலைவர் ஆர்.டி.என். ஆதி சரவணன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை, மாநில தலைவர் சிவக்குமார் சிறப்புரை, பொருளாளர் ரம்ஜான் நன்றியுரை கூறுகின்றனர்.

இந்த குடும்ப விழாவில் செயற்குழு உறுப்பினர்கள் கௌரவித்தல், வாழ்நாள் சாதனையாளர்கள் கவுரவித்தல், போட்டியில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்குதல், கல்வி உதவித் தொகை வழங்குதல், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் மதிய உணவு (சைவம் /அசைவம்) வழங்கப்படும்.

மேலும் கௌரவிக்கப்படும் வாழ்நாள் சாதனையாளர்கள் : S.ரங்கராஜன், சாந்தி ஸ்டுடியோ, மண்ணச்சநல்லூர். K.சுகுமார் (எ) கண்ணன், ரவி ஸ்டுடியோ, மணப்பாறை. N.கெம்பு, கெம்பு ஸ்டுடியோ, திருவெறும்பூர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision