கடைமடை விவசாயத்தை பாதுகாக்கக்கோரி நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கடைமடை விவசாயத்தை பாதுகாக்கக்கோரி நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம்

காவிரியின் கீழ் பாசன விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல்,  புதிய நீர் பாசன திட்டங்களை அனுமதிக்கக்கூடாது, காவிரி நீரை வணிக நோக்கத்தோடு தனிநபர் சுயநலத்திற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 15 லட்சம் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் நோக்கத்தோடு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும்.

பரமத்தி வேலூர், சோழசிராமணி, மொளசி மற்றும் மேட்டூருக்கு கீழே காவிரி ஆற்றில் ராஜ வாய்க்கால் ஆயக்கட்டு பாசன பகுதியை பாலைவனமாக்கும் நோக்கோடு 2019 மேல் வழங்கப்பட்டுள்ள 42 இறவை பாசன திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் உள்ள நீர்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுப்பணித்துறை நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn