திருச்சி விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது விவசாயிகள் புகாரால் பரபரப்பு

திருச்சி விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது  விவசாயிகள் புகாரால் பரபரப்பு

திருச்சி விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது விவசாயிகள் புகாரால் பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர்

அருள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் அயிலைசிவசூரியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உட்பட பல்வேறு விவசாய சங்கத்தினர்கலந்து கொண்டனர்.

இதில் அய்யாகண்ணு பேசும் போது, வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் கேட்டு விண்ணப்பித்தால் வேறு வங்கிகளில் கடன் இல்லை என சான்றிதழ் வாங்கி வருமாறு அதிகாரிகள் அலைக் கழிக்கிறார்கள். 

மேலும் சின்ன சூரியூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை அதிகாரிகள் துணையோடு பட்டா போட்டு விற்பனை செய்கிறார்கள் என கூறினார். 

கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி கொடுப்பதில்லை மேலும் விவசாயிகள் வங்கிகளுக்கு கடன் வாங்கச் செல்லும் பொழுது உரிய மரியாதை கொடுப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தனர் இது தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட திருவரம்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இதன் காரணமாக சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் சங்கத்தின் துணை துணைத் தலைவர் மேகராஜன், சம்சுதீன், உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கலந்துகொண்டு பேசினர்.