இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டி ஒன்றியம் வீ.பெரியபட்டி, அமையபுரம், முகவனூர், புதுக்கோட்டை, நடுப்பட்டி, வையம்பட்டி, செக்கனம், உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கூலித்தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் என்.பூலாம்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சண்முகானந்தம் தலைமை வகித்தார். பாலுசாமி, சவரியப்பன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டதை துவக்கி வைத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் த. இந்திரஜித், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.பாஸ்கர்,
போக்குவரத்து கழக ஏஐடியூசி மாநில துனை செயலாளர் சுப்பிரமணியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, வி தொ ச மாவட்ட செயலாளர் கனேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணவை நகர செயலாளர் ஜனசக்தி உசேன், போக்குவரத்து கழக ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
உண்ணாவிரதத்தை முடித்து வைத்து இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் பெரியசாமி சிறப்புரை நிகழ்த்தினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர்கள் ஸ்டீபன் சேகர், தங்கராஜ், ஒன்றிய பொருளாளர் செலின் லீமாரோஹி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் இராமசாமி, ஆரோக்கியம், வேளாங்கன்னி, வீராச்சாமி மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூலித் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision