கனரக லாரியில் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

கனரக லாரியில் தீ  - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

திருச்சி கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான (sail yard ) சைல் யார்ட்-க்கு, ராஜஸ்தான் மாநிலம் நாக்குபூரில் இருந்து கம்பி ஏற்றி வந்த லாரி திடீரென தீ பற்றி எரிந்தது. இதனை அறிந்த அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து தீ வேகமாக எரிய தொடங்கியதால் அங்கிருந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனை தொடர்ந்து கண்டோண்மென்ட் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்தனர். ஓட்டுநர் சவர்லால் வைத்திருந்தா லைசென்ஸ் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை தீயில் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்தை குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சைல் யார்ட் என்பது மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு ஒப்பந்த பணிகளுக்கான இரும்பு கம்பி ஆங்கில் மற்றும் கனரக இரும்புகள் ஆகியவை சேமித்து வைக்கப்படும் இடமாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision