ஆடி மாத முதல் வெள்ளி - சோழீஸ்வரர் கோவிலில் 108 கோமாதா பூஜை.

ஆடி மாத முதல் வெள்ளி - சோழீஸ்வரர் கோவிலில் 108 கோமாதா பூஜை.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் பழமை வாய்ந்த கோமளவல்லி உடனுறை ஸ்ரீ சோழீஸ்வரர் கோவில் உள்ளது. புலிப்பாணி சித்தர் தவம் செய்த இக்கோவிலில், விசேஷ நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உலக நன்மை வேண்டி ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம், மாலை இட்டும், வஸ்திரங்கள் சாற்றியும், மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரங்கள் முழங்க கோமாதா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பசுக்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

அதேபோல் காளைகள் மற்றும் குதிரைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோமாதா பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் வயது முதிர்ந்த தம்பதியினருக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவர்களிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision