திருச்சியில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 267 சிறப்பு மையங்கள் அமைக்கபட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60,613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் 1036 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மையங்கள் அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிறமாநிலங்கள் மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்துகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செயயப்பட்டுள்ளன.
இதற்கென 1036 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகர் நல அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன் உதவி செயற்பொறியளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கமால் பாட்ஷா, விஜயலட்சுமி, மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision