ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் - பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் - பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு தங்க கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது - பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..
இதற்காக உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.00 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கொடி படத்திற்கு பட்டாச்சாரியார்களால் மற்றும் அர்ச்சகர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற ஏப்ரல்26 ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று முதல் 11 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா நிகழ்வில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision