யாத்திரை செல்ல விரும்பும் பயணிகளுக்கு ரயில் பயணத்துடன் ஹெலிகாப்டர் பயணமும் இணைப்பு

யாத்திரை செல்ல விரும்பும் பயணிகளுக்கு ரயில் பயணத்துடன் ஹெலிகாப்டர் பயணமும் இணைப்பு

திருச்சி (IRCTC) தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் வாசு இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ஐ.ஆர்.சி.டி.சி சார்பாக Baharath Gavrau என்ற சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் பெயர் கேதார்நாத், பத்ரிநாத், கார்த்திக் சுவாமி கோவில் யாத்திரை என்ற பெயர் வைத்துள்ளோம். இந்த ரயிலின் சிறப்பு அம்சங்கள் என்பது இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் டிக்கெட்டையும் சேர்த்து இணைத்துள்ளோம். 

எப்படி என்றால் உத்தரகாண்ட் டூரிசம் டெவலப்மெண்ட் போர்டு அவர்களுடன் இணைந்து 300 யாத்திரி பயணிகளை அழைத்துச் செல்கிறோம். இந்த பயணிகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு உத்தரகாண்ட் சென்ற பிறகு நூறு, நூறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பூத் காசியில் இருந்து பத்ரிநாத் போகக்கூடிய ஹெலிகாப்டர் பயணத்தை உறுதி செய்து உள்ளோம்.

 இந்த ரயிலில் பயணம் 12 இரவுகளுடன் 13 நாட்கள் கொண்டது இதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3-ம் வகுப்பு ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் பிரயாண கட்டணம், ஹெலிகாப்டர் கட்டணம், உணவு கட்டணம், தங்கும் வசதி எல்லாம் சேர்த்து ரூபாய் 58,946 மற்றும் 62,353 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த ரயில் பயணமானது மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, சென்னை வழியாக செல்லக்கூடியது. எனவே தமிழக மக்கள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதுவரை 90 சதவீதம் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision