கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் திருச்சி அரங்கில் வீராங்கனை விழுந்த சம்பவம்- பரபரப்பு

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்  திருச்சி அரங்கில் வீராங்கனை விழுந்த சம்பவம்- பரபரப்பு

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள, உள்விளையாட்டு அரங்கத்தில்,கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று 2வது நாளாக நடந்துவருகிறது.

அதில் பெண்கள் பிரிவில் நிலை மல்லர் கம்பம் மற்றும் கயிறு மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.

அதில் கயிறு மல்லர் கம்பம் போட்டியில் கலந்து கொண்ட ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த D. NandaniBai (15/24) D/O Deenewala Kanata Sing என்பவர் Rope -ல் Mallakhamb செய்து கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்ததில் அவரது வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உடனே திருச்சி அரசு மருத்துவமனைக்கு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்ததை தொடர்ந்து வீராங்கனை நலமுடன் உள்ளார்.

 தற்போதைய (மாலை 4.30)நிலையில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், 

தமிழ்நாடு 207.35 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், மத்திய பிரதேஷ் 205.30 இரண்டாவது இடத்திலும், சட்டீஸ்கர் 201.65 புள்ளிகள்புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும்  உள்ளன.