பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கொளக்கொடி அப்பண்ணநல்லூர் ஆகிய ஊர்களில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொளக்குடி, அப்பணநல்லூர் இந்து முன்னணி சார்பில் 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொளகுடி பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்து கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 8 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.

அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் கொளக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருஈங்கோய்மலை பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் கரைக்கபட்டது. 

நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கண்ணன், பிரேம்குமார், விமல் பாண்டியன், ராஜேஷ், திருப்பதி, அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவை முன்னிட்டு திருச்சி போலீஸ் எஸ். பி வருண்குமார் மேற்பார்வையில் ஏடிஎஸ்பிகள் சுப்பையன், கோடிலிங்கம், 10 டிஎஸ்பி, 20 இன்ஸ்பெக்டர்கள், 47 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 676 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா வாகனம், நிகழ்வை கண்காணிக்கும் விதமாக சுழல் கேமரா பொருத்தப்பட்ட வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் முசிறி கோட்டாட்சியர் ராஜன் மேற்பார்வையில் தொட்டியம் வட்டாட்சியர் உள்பட அனைத்து வருவாய்த்துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision