அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானா பகுதியில் முன்னாள் எம்பியும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் புரட்சித் தலைவி புகழ் ஓங்குக என்று கோஷத்தோடு பிறந்தநாள் தினத்தை அதிமுக பிரமுகர்கள் கொண்டாடினார். இதனையடுத்து ஜெயலலிதா பிறந்த தினமான பிப் 24 ம் தேதி இன்று திருச்சி லால்குடி அரசு மருத்துவமனயில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் மற்றும் லால்குடி நகரச் செயலாளர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேரவை லால்குடி எஸ்.எஸ்.விக்னேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்ட னர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision