5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அசத்தல்

5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அசத்தல்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஸ்ரீரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.பழனியாண்டி. 

Advertisement

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம், இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினார்.

அப்போது மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் கட்டிடம் ஒன்று பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை கண்ட ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில்கொண்டு உடனடியாக கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டுமெனவும், சீரமைக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த கட்டிடம் நேற்று 5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் இனாம்குளத்தூர் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81