திருச்சியின் முதல்முறையாக சோலார் பவரில் இயங்க காத்திருக்கும் அரசு பள்ளிகள்!!

தற்போது நிலவி வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் எதுவும் இயங்கவில்லை. இதன் பிறகு பள்ளிகள் செயல்படும் போது மின்சாரத்தை சேமிப்பதற்காக சோலார் பவரில் நம்முடைய திருச்சி அரசு பள்ளிகள் இயங்கக் காத்திருக்கின்றன. அதைப் பற்றிய தொகுப்பு தான் இது!

மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ஒரு சோலார் பவர் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சியில் உள்ள 7 அரசு பள்ளிகள் இதற்கு முதற்கட்டமாக தேர்வாகியுள்ளனர். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, மரக்கடை சையது முர்சா மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் வருகின்றன. இதன் பிறகு அடுத்தகட்ட பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

Advertisement

சோலார் பவர் திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 140 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளியிலும் 20 வகுப்பறைகள் இந்த சோலார் பவர் மூலம் இயங்கும் வகையில் செயல்படுத்த உள்ளன. இச்செய்தியினை தலைமை கல்வி அதிகாரி எஸ்.சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

சோலார் பவரில் இயங்குவதால் பள்ளிகளில் மின்சாரம் சேமிக்கப்படும் அதோடு சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து மாணவர்கள் கற்கும் வகையில் எளிதாகவும் அமையும்.இத்திட்டமானது வரும் காலங்களில் அதிகமான பள்ளிகளில் செயல்படுத்தவும் உள்ளனர்.