திருச்சி வேலன் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்

திருச்சி வேலன் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம்


திருச்சி வேலன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபீனிக்ஸ் கிளப் இணைந்து கோவிட்-19  தடுப்பூசி முகாமை இன்று நடத்தியுள்ளனர். டாக்டர் ஜமீர் பாஷா, ஷாநவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் ராஜவேல் கண்ணையன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது அமைய வேண்டும் என்று இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் ரோட்டரி கிளப் சேர்ந்த உறுப்பினர்கள் 30 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும் அதனுடைய கட்டாயத்தை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிகழ்த்தப்பட்ட நிகழ்வே ஆகும். இதில் முன் களப்பணியாளர்கள், காவல்துறையினர், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில்  அப்பணியில் ஈடுபடுபவர்களுக்கும்  மிக முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் தங்கள் ஆதார் கார்டு கொண்டு வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படும் என்ற பயத்தோடு இருக்கின்றனர். தடுப்பூசி என்பது நம்மை தற்காத்துக் கொள்வதற்கே என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உருவாகும் போதே உடலும், மனமும் அதை உள்வாங்குகிறது. இன்று வரை தடுப்பூசி கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்க படாததால் அதுபற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பின் வரும் நாட்களில் அவர்களுக்கும்  தடுப்பூசி போடப்படும் என்று திருச்சி வேலன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ராஜவேல் கண்ணையன்  கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU